அமைச்சர் பொன்முடி அவர்களின் தம்பியான மருத்துவர் தியாகராஜன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: அமைச்சர் பொன்முடி அவர்களின் தம்பியான மருத்துவர் தியாகராஜன் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி; உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் தம்பியான மருத்துவர் க. தியாகராஜன் (65) அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன்.  உடன்பிறந்த தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: