இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 114 பேர் பாதிப்பு: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக பதிவாகியுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் சமீப காலமாக கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இரண்டு தடுப்பூசிகளுடன் ஒரு பூஸ்டர் ஊசியை செலுத்தியவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,035 ஆக பதிவாகியுள்ளது.  இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,726 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,48,472 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,20,17,56,888 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 50,871 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: