×

காசி தமிழ் சங்கமம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும்: தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லி: காசி தமிழ் சங்கமம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பாஜக தேசிய செயற்குழுவின் முதல் நாள் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவுறித்தியுள்ளார். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் கலாசார நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த பிரதமர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முதல் நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய அவர்; காசி தமிழ் சங்கமம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகளை பாஜகவினர் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், நிகழ்ச்சிகள் மூலம் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகத்தை மாநிலங்கள் பரிமாற்றம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களும் இந்த முக்கிய கூட்டத்தில் பங்கேற்றனர். தேசிய செயற்குழு கூட்டத்தின் மூன்று தீர்மானங்களும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச விவகாரங்களை உள்ளடக்கியதாக இருந்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு நடைபெற உள்ள 9 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடளுமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்கபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Pajakavi ,Kasi Tamil Sangam ,PM Modi ,National Executive Meeting , BJP should organize various programs like Kashi Tamil Sangam: PM Modi instructs in National Working Committee meeting
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...