×

திடீரெனெ அதிகரிக்கும் கொரோனா: கேரளத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம்.! மாநில அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. சீனாவில் சமீப காலமாக கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இரண்டு தடுப்பூசிகளுடன் ஒரு பூஸ்டர் ஊசியை செலுத்தியவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்  கேரள அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனா தொடா்ந்து அச்சுறுத்தலாக உள்ளது.

மேலும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே கேரளத்தில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனங்கள், அரசுப் பேருந்துகளில் செல்லும்போதும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். அனைவரும் தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இந்த உத்தரவு ஜன.12 முதல் ஒரு மாதத்துக்கு அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kerala ,State Government , Sudden increase in Corona: In Kerala, it is mandatory to wear face shield in public places.! State Govt Notification
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...