காணும் பொங்கலையொட்டி சென்னை நகர், புறநகரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: காணும் பொங்கலையொட்டி சென்னை நகர், புறநகரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மெரினா,பெசன்ட்நகர், வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று கடற்கரை பகுதிகள், சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக பொழுதை களிக்க உள்ளனர்.

எனவே போலீசார் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மாமல்லபுரம், கோவளம், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: