வடமாநிலங்களில் ஜன.19க்கு பிறகுதான் குளிர் விலகும்: வானிலை மையம் அறிவிப்பு

புதுடெல்லி: வடமாநிலங்களில் ஜன.19க்கு பிறகு தான் குளிர் மெதுவாக விலகும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. வடமாநிலங்களில் கடும் குளிர்வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறதே தவிர குறையவில்லை. இந்தநிலையில் வரும் 19ம் தேதி முதல் தான் குளிர் மெதுவாக குறையத்தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இமயமலையில் இருந்து வரும் குளிர்ந்த பனிக்காற்று காரணமாகத்தான் இந்த சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன.19ம் தேதிக்கு பிறகு குளிர் காற்று வீசும் திசை மாறும். அதன்பின்னர் வெப்பம் அதிகரித்து குளிர் குறையத்தொடங்கும். அதுவரை டெல்லி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உபி, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் குளிர் நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. ரம்பன் பகுதியில் புதிதாக பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்குள்ள இரும்பு சுரங்கப்பாதை முற்றிலும் பனிக்கட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜம்முவுக்கு செல்லும் வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது அந்த பாதையை சீரமைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: