கொச்சி பல்கலைக்கழகம் அனுமதி மாதவிலக்கு நாட்களில் மாணவிகளுக்கு விடுமுறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. மாணவர் சங்கக் கூட்டமைப்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தின. இந்நிலையில் மாணவர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று மாதவிலக்கு நாட்களில் மாணவிகளுக்கு விடுமுறை வழங்க கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.

Related Stories: