நெல்லை அருகே கோயில் வளாகத்தில் மாடு மேய்ந்ததை கண்டித்த ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: 7 பேர் கைது

வீரவநல்லூர்: நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே மேலச்செவலை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டு (56), அங்குள்ள இந்துசமய அறநிலையத்துறையின் நவநீதகிருஷ்ண சுவாமி கோயிலில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் நின்ற கிருஷ்ணனை அங்கு வந்த கும்பல், சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் கோயில் வளாகத்தில் மாடு மேய்ந்ததை கண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் மேலச்செவலை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: