இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்

ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. ஆச்சே மாகாணத்தில் கடலோர மாவட்டமான சிங்கிலில் இருந்து தென்கிழக்கே 48கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு உருவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்களும் உடனடியாக தெரியவில்லை.

Related Stories: