மதுரை பாலமேட்டில் நடைபெற்று வந்த பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு: பரிசுகளை பெற்ற வீரர்கள்

மதுரை: மதுரை பாலமேட்டில் நடைபெற்று வந்த பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

பாலமேட்டில் 9 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 860 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. 23 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பிடித்தார். சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட தமிழரசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்த பாலமேட்டைச் சேர்ந்த மணிகண்டனுக்கு பைக் பரிசு வழங்கப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 15 காளைகளை அடக்கிய ராஜா 3-ம் இடத்தை பிடித்துள்ளார்.

Related Stories: