×

உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு உறுதிமொழியுடன் கோலாகலமாக தொடங்கியது.! 1000 காளைகள், 335 மாடு பிடிவீரர்கள் பங்கேற்பு

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்கள் உறுதிமொழியுடன் தொடங்கியது. பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கியது . இந்த  ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள்,  335 மாடு பிடிவீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  100 கால்நடை மருத்துவப் பணியாளர்கள் 15 குழுவாக பிரிந்து மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் மற்றும்  மாடுபிடி வீரர்களுக்கு கார்,  மொபட்,  பீரோ , கட்டில், சைக்கிள் உள்ளிட்ட  பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. வீரர்களுக்கு உடல்தகுதி சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டு பங்கேற்கும் காளைகளுக்கு ரத்தம் எச்சில் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து சரியாக காலை 7.45 மணிக்கு பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உறுதி மொழியை வாசிக்க, மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.  இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.  முதலில்  அய்யனார் கோயில், முத்துமாரியம்மன் கோயில்  காளைகள் அவித்துவிடப்பட்டன.  அதனை அடுத்து தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன பாலமேடு ஜல்லிக்கட்டை ஏராளமான பொதுமக்கள் திரண்டு உற்சாகத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.

Tags : Madurai ,Palamedu ,Jallikattu , The world famous Madurai Palamedu jallikattu started with a bang! 1000 bulls, 335 cow handlers participated
× RELATED தேர்தல் நடத்தை விதிகள் அமலில்...