இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 317ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

திருவனந்தபுரம்: இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 317ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு அயர்லாந்துக்கு எதிராக 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.

தற்போது 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை இந்திய அணி வீழ்த்தியிருப்பதன் மூலம் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை பாண்டியா தலைமயிலான அணி 2-1 என்ற கணக்கில்  தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியநிலையில், கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-சும்பன் கில் களமிறங்கினர். இதில் இலங்கை வீரர் கருணாரத்னே வீசிய 16-வது ஓவரில் ரோகித் சர்மா(42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவரை தொடர்ந்து சுப்மன் கில் மற்றும் விராட்கோலி சத்தம் அடித்தனர். 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்களை எடுத்து இந்திய அணி.

இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.11.5 ஓவரில் 40 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி. தொடர்ந்து 22 ஓவர் முடிவில் 73 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

Related Stories: