சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வறண்ட வானிலையே நிலவும். ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்பு உள்ளது.