திருப்பூர் கோயிலில் திருட்டை தடுத்த பூசாரியை கொன்று எரித்த வாலிபர் பிடிபட்டார்: மற்றொரு கோயிலில் திருடியபோது சிக்கினார்

திருப்பூர்: திருப்பூர் வெங்கமேடு வெங்கமேடு- ஆத்துப்பாளையம் ரோட்டில் உள்ள கன்னிமார் கருப்பராயன் கோயிலில் தங்கி பூசாரியாக வேலை செய்தவர் சுப்ரமணி (72). கடந்த மாதம் 17ம் தேதி கோயில் பின்புறம் கொலை செய்யப்பட்டு, எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். ஏற்கனவே கோயில்களில் கொள்ளையடித்தவர்களை பிடித்து விசாரித்தனர்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி திருப்பூர் காங்கயம் சாலை விஜயாபுரம் பகுதியில் உள்ள காட்டுபாளையம் புத்துக்கண் நாகாத்தம்மன் கோயிலில் உண்டியல், சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த 2 பவுன் தாலி செயின் திருட்டு போனது. இது தொடர்பாக, நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின்பேரில் சதீஷ்குமார் (30) என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திருப்பூர் வெங்கமேடு கோயிலில் உண்டியலை திருடும்போது அதனை தடுத்த பூசாரியை கொலை செய்து எரித்ததையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அனுப்பர்பாளையம் போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories: