பாதுகாப்பு விதிகளை மீறி ஜனாதிபதி காலை தொட முயன்ற பெண் இன்ஜினியர் சஸ்பெண்ட்

ஜோத்பூர்: ராஜஸ்தானின் ரோஹெட்டில் கடந்த 4ம் தேதி  நடந்த சாரண, சாரணியர் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது, ராஜஸ்தான் பொதுசுகாதார பொறியியல் துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றும் அம்பா சியோல் என்பவர் பாதுகாப்பு விதிகளை மீறி ஜனாதிபதி முர்முவின் கால்களை தொட முயன்றுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தலையீட்டின்பேரில், அம்பா சியோலை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக ராஜஸ்தான் பொதுசுகாதார பொறியியல் துறை தெரிவித்து உள்ளது.

Related Stories: