அடிலெய்டு டென்னிஸ் பெலிண்டா சாம்பியன்

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் (2) தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவுடன் (25 வயது, 8வது ரேங்க்) நேற்று மோதிய பெலிண்டா (25 வயது, 13வது ரேங்க்), அதிரடியாக விளையாடி 6-0, 6-2 என நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 7 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியாவில் விளையாடிய டென்னிஸ் தொடர்களில் பெலிண்டா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவரது டென்னிஸ் வாழ்க்கையில் கைப்பற்றிய 7வது டபுள்யு.டி.ஏ சாம்பியன் பட்டம் இது. இவர் 2021ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: