×

 ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடர் இந்திய அணியில் சூரியகுமார், இஷான்

புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணியுடன் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ள இந்திய அணியில் அதிரடி வீரர்கள் சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் முதல் முறையாக இடம் பெற்றுள்ளனர். அடுத்த மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் பிப்.9ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் டெல்லியில் பிப். 17ல் தொடங்கி நடைபெறும். இந்த 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார், இஷான் இருவரும் இந்திய டெஸ்ட் அணியில் புதுமுக வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியா டெஸ்ட் அணி: ரோகித் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கில், செதேஷ்வர் புஜாரா, விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எஸ்.பரத் (கீப்பர்), இஷான் கிஷன் (கீப்பர்), ஆர்.அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், சூரியகுமார்.

* நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் ஜன.18ம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து 2வது போட்டி ராய்பூர் (ஜன. 21), கடைசி ஒருநாள் இந்தூரில் (ஜன. 24) நடைபெற உள்ளன. டி20 போட்டிகள் ராஞ்சி (ஜன. 27), லக்னோ (ஜன. 29) மற்றும் அகமதாபாத்தில் (பிப். 1) நடைபெறும்.

இந்தியா டி20 அணி: ஹர்திக் (கேப்டன்), சூரியகுமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெயிக்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் ஷர்மா (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, பிரித்வி ஷா, முகேஷ் குமார். இந்தியா ஒருநாள் அணி: ரோகித் (கேப்டன்), ஹர்திக் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் அய்யர், சூரியகுமார், ராகுல் திரிபாதி, கே.எஸ்.பரத் (கீப்பர்), ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.


Tags : Suryakumar ,Ishan ,Australia , Suryakumar, Ishan in Indian team for Test series against Australia
× RELATED சூர்யகுமார், இஷான் கிசான் அதிரடி ஆட்டம்; பெங்களூருவை வீழ்த்தியது மும்பை