இலங்கை செல்லும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

கொழும்பு: சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் சர்வதேச பயணிகளுக்கான புதிய கொரோனா நெறிமுறைகள் நேற்று முன்தினம் அமலுக்கு வந்துள்ளன. இந்த புதிய நெறிமுறைகளை இலங்கை வரும் அனைத்து இந்தியர்களும் பின்பற்றுமாறு கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. புதிய நெறிமுறைகளின்படி, இலங்கைக்கு செல்லும் அனைத்து சுற்றுலா பயணிகளும் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: