கடல் நீர் சுத்திகரிப்பு ஆராய்ச்சி இந்திய வம்சாவளி மாணவருக்கு அமெரிக்கா கல்வி உதவித்தொகை

நியூயார்க்: மேம்படுத்தப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்திய வம்சாவளி அமெரிக்க மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்திய வம்சாவளி மாணவரான ஹர்ஷ் பட்டேல், அமெரிக்காவின் ஜார்ஜியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் வேதியியல் மற்றும் உயிர் மூலக்கூறு பொறியியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.  இவர், தற்போது அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் ஆராய்ச்சி படிப்பை படித்து வருகிறார். அதன்ஒரு பகுதியாக, வறண்ட பகுதிகளில் சுத்தமான, பாதுகாப்பான நீரை குறைந்த செலவில் கிடைக்க செய்ய, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் கடல்நீரை சுத்திகரிப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஹர்ஷ் பட்டேல் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், ஹர்ஷ் பட்டேலுக்கு ரூ.10லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அமெரிக்கன் மெம்ப்ரேன் டெக்னாலஜி அசோசியஷன் தெரிவித்துள்ளது.

Related Stories: