ஈரான் மாஜி பாதுகாப்பு அதிகாரிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

துபாய்: உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் முன்னாள் பாதுகாப்பு துறை அதிகாரி அலி ரெசா அக்பர். இவர் அரசுக்கு எதிராக உளவுபார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைதொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அலி ரெசாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் நீதித்துறையின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் எப்போது தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. சில நாட்களுக்கு முன்னரே அவர் தூக்கிலிடப்பட்டதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.

Related Stories: