×

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கண்காணிப்பு கோபுரத்தை திறந்து வைத்தார் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கண்காணிப்பு கோபுரம், ( Police Watch Tower) மற்றும் மெரினா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் “ Solar Powered Out Post” களை திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப உத்தரவின் பேரில் சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், புதிதாக காவல் கண்காணிப்பு கோபுரம், (Police Watch Tower) மற்றும் மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலும், இரவு நேரங்களில் எளிதில் பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும், சி.சி.டி.வி கேமரா வசதியுடன் கூடிய 4 “Solar- Powered Out Post” கள் மெரினா கடற்கரை மணற்பரப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப இன்று (14.01.2023) காலை பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் கண்காணிப்பு கோபுரத்தை, (Police Watch Tower) திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் அங்கு கடற்கரை மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 28 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களையும் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மெரினா கடற்கரை, நீச்சல் குளம் பின்புறம் மணற்பரப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் 4 “Solar Powered Out Post” களை திறந்து வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மெரினா மணற்பரப்பில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஜாக்கெட்களை (Reflector Jackets) வழங்கினார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையங்களை (Out Post) இரவு நேரங்களில், பொது மக்கள் எளிதாக அடையாளம் கண்டு உதவி பெறவும், பண்டிகை காலங்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடும் போது, பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும், அவசர தேவைக்கு பொதுமக்கள் எளிதாக காவல் உதவி மையத்தை அணுகவும், கூட்ட  நேரங்களில்  காணாமல் போகும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பற்றி புகார் தெரிவிப்பதற்கும், அவர்களை  கண்டுப்பிடிக்கவும் இந்த காவல் உதவி மையங்கள் (Solar- Powered Out Post) முக்கிய பங்காற்றும்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் தெற்கு பிரேம் ஆனந்த் சின்கா, இ.கா.ப, இணை ஆணையாளர்கள் M.R.சிபி சக்ரவர்த்தி, இ.கா.ப,  (தெற்கு மண்டலம்) திஷா மிட்டல், இ.கா.ப, (கிழக்கு மண்டலம்), துணை ஆணையாளர்கள் P.மகேந்திரன், (அடையார்), ரஜத் சதுர்வேதி, இ.கா.ப (மயிலாப்பூர்), ரோகித் நாதன் ராஜகோபால், இ.கா.ப, .தேஷ்முக் சேகர் சஞ்சய், (திருவல்லிக்கேணி), காவல் உதவி ஆணையாளர்கள்,  காவல் ஆய்வாளர்கள், ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Police Minister ,Shankar Jiwal ,Police Surveillance Tower ,Chennai ,Besant Nagar Beach , Chennai Besant Nagar Beach, Police Watch Tower, Commissioner of Police Shankar Jiwal
× RELATED ஐதராபாத்தில் நடந்த பூப்பந்து...