×

TN நலம் 360'என்ற யூ-டியூப் சேனலை உருவாக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு: தமிழ்நாடு அரசு

 சென்னை: தமிழ்நாடு பொதுசுகாதார ஆராய்ச்சி சங்கத்தின் ஒரு பகுதியாக TN நலம் 360 என்ற யூ-டியூப் சேனல் விரைவில் உருவாக உள்ளது. TN நலம் 360 என்ற யூ-டியூப் சேனலைஉருவாக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரின் முன்மொழிவை ஏற்று அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. யூடியூபை உருவாக்குவதற்கான செலவினங்களை அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளது. பிற திட்டங்களின் அங்கிகரிக்கப்பட்ட ஐஇசி நிதியிலிருந்து பெறலாம் என அரசாணையில் அறிவுறுத்தியுள்ளது.


Tags : Govt of Tamil Nadu ,YouTube , Govt of Tamil Nadu issues ordinance giving permission to create YouTube channel 'TN Nalam 360'.
× RELATED யூ டியூப்பில் வீடியோ வெளியிட்டதன்...