×

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ரூ.185 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனை ஓட்டம்

*விரைவில் பயன்பாட்டிற்கு வரும்

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 6வது வார்டு பகுதியில் நகராட்சி மூலம் கசடுகழிவு மேலாண்மை திட்டத்தில்

ரூ 185 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி நிறைவுபெற்று சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் ரூ.149 லட்சத்தில் திருக்குளம் மேம்பாடு செய்யும் பணி நடைபெறுகிறது.


வெட்டுக்குளம் ரூ.150 லட்சத்தில் மேம்பாடு செய்யும் பணியும் நடைபெறுகிறது. அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சத்தில் உள்நோயாளிகள் உதவிக்கு வருபவர்கள் தங்குவதற்கு நவீன கட்டிடம் கட்டும் பணி நிறைவுபெற்று உள்ளது. ரூ.295 லட்சத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 10 மண் சாலைகள் ரூ.161.25 லட்சத்தில் பேவர் பிளாக் சாலையாக அமைக்கும் பணி நடைபெறுகிறது.

ஜேகேஆர் கார்டன் பகுதியில் ரூ.40 லட்சத்தில் புதியபூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேளிக்குளம் ரூ.64 லட்சத்தில் மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சாய் நகரில் பூங்காவினை ரூ.20.50 லட்சத்தில் மேம்பாடு செய்யும் பணியும் நடைபெறுகிறது. வீரன் நகரில் ரூ.25 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. நமக்கு நாமே திட்டத்தில் நகரில் 1, 2, 5, 9, 10, 16, 24 ஆகிய வார்டுகளில் வணிகப் பகுதிகளில் ரூ.14 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

 நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு ரூ.150 லட்சத்தில் வாழ்வாதாரம் ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. வேதை சாலையிலுள்ள குப்பை கிடங்கிலுள்ள குப்பைகளை ரூ.109.60 லட்சத்தில் பயோமைனிங் முறையில் தரம் பிரித்து இடத்தினை மீட்டெடுக்கும் பணியும் தொடங்கப்பட உள்ளது. திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் நகராட்சியில் 6வது வார்டில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ.185 லட்சத்தில் தினசரி 10 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி நிறைவுபெற்றுள்ளது.

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. இதில் 6,800 குடியிருப்புகள், 1,400 வணிக நிறுவனங்கள் உள்ளன. மற்றும் நகராட்சிக்கு 5 சமுதாய கழிவறை, 5 பொது கழிவறைகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உரியவர்களின் நச்சுதொட்டி நிரம்பியதும் நச்சுதொட்டி சுத்தம் செய்யப்பட்டு கழிவுகள் திறந்தவெளியில் அகற்றப்பட்டு வந்தது.

இதற்கு மாறாக நகராட்சியால் 6வது வார்டில் கட்டப்பட்டுள்ள கழிவுகசடு சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்ட கட்டுமானம் தற்போது நிறைவடைந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் 24ம்தேதி காணொளி காட்சிமூலம் திறந்து வைத்தார். தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இது மிக விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர பட உள்ளது.

இதற்கான நகராட்சிக்கு சொந்தமான வாகனம் ஒருமுறை கழிவுநீர் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் (பொ) பிரதான் பாபு தெரிவித்தார். இந்த நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் சோதனை ஓட்டத்தை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், ஆணையர் (பொ) பிரதான் பாபு ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags : Thiritaruppundi Municipality , Thiruthuraipoondi,Sewage Water Plant,
× RELATED தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில்...