அதிமுகவை வெட்ககேடாக நினைக்கிறேன்: பிரேமலதா காட்டம்

கோவை: கோவை கணபதியில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது: நான் கிராமத்தில் இருந்து வந்து தான் தலைவர் மனைவியாக உங்கள் அண்ணியாக நிற்கிறேன். சின்ன கவுண்டர், வானத்தைப்போல படங்களில் கொங்கு மண்டலத்தை காட்டியது கேப்டன். 40 வருடம் மக்களுக்காக வாழ்ந்தவர் கேப்டன்.

தேமுதிக நேர்மையான கட்சி. நல்லவர் ஆரம்பித்த கட்சி. என்றும் தவறான வழியில் தேமுதிக செல்லாது. அதிமுகவை வெட்ககேடாக நினைக்கிறேன். தமிழ்நாட்டில் எங்கும் பொங்கல் விழா அதிமுக கொண்டாடவில்லை. தமிழக அரசியல் வரலாற்றில் கவர்னர் முதன்முறையாக வெளிநடப்பு செய்த நிகழ்வு தலைகுனிவு நாளாக கருப்பு தினமாக பதியப்பட்டிருக்கிறது. கவர்னர் சாதித்துக் காட்டிருக்க வேண்டும். கவர்னருக்கு தேமுதிக கண்டனம் தெரிவிக்கிறது.

Related Stories: