பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு இமாச்சல அமைச்சரவை ஒப்புதல்

சிம்லா: இமாச்சலப்பிரதேச புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே பழைய ஓய்வுதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சுக்விந்தர் சிங் சுக்கு முதல்வராக பொறுப்பேற்றார். முன்னதாக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மாநிலத்தில் பழைய ஓய்வூதிய முறையே மீண்டும் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது.

இந்நிலையில் இமாச்சல் அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, பழைய ஓய்வூதிய திட்ட பலன்கள் உடனடியாக வழங்கப்படும்”என்றார்.

Related Stories: