×

ரஜோரி வழக்கு விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைப்பு: அமித் ஷா அறிவிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பான விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். ரஜோரி மாவட்டத்தில்   தீவிரவாதிகள்  தாக்குதல்களில் 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 7 பேர் பலியாகினர். தாக்குதல் நடந்து 13 நாட்களுக்கு பிறகு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒருநாள் பயணமாக ரஜோரியின் டோங்கிரி கிராமத்திற்கு சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் அமித் ஷா கூறியதாவது, “ரஜோரி தாக்குதல் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  என்ஐஏவின் விசாரணைகளுக்கு ஜம்மு காஷ்மீர் போலீசார் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். ” என்று கூறினார். முன்னதாக டோங்கிரி கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற அமித்ஷா திட்டமிட்டிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக, 7 பேரின் குடும்பங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

Tags : Rajouri ,NIA ,Amit Shah , Rajouri case handed over to NIA: Amit Shah announces
× RELATED அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு..!!