×

பழநி கோயிலின் 220 ஏக்கர் வழக்கு: அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பழநி தண்டாயுத பாணி கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 220 ஏக்கர் சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழனி தண்டாயுத பாணி கோயிலுக்கு, கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த பலர் 220 ஏக்கர் சொத்துக்களை தானமாக வழங்கியுள்ளனர். இந்த சொத்துக்களை கண்டறிந்து மீட்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. வழக்ைக விசாரித்த நீதிபதி, பழனி தண்டாயுதபாணி கோயிலின் சொத்துக்களை அடையாளம் கண்டு, மீட்பது தொடர்பான கூட்டத்தை பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து 9ம் தேதிக்குள் கூட்ட வேண்டும். சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து பிப்ரவரி 14ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்ய வேண்டும்  என்று உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



Tags : Palani , Palani temple's 220 acres case: Court orders report
× RELATED வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை