×

ஆளுநர் திடீர் டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 11.20 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழ்நாடு  சட்டசபையில், கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையின் போது, சில சம்பவங்கள் நடந்தன. அதன் பிறகு அதற்கு எதிராக, தமிழ்நாடு முதலமைச்சர் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி, உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபை மரபையும் மீறி வெளியேறினார்.
இதுகுறித்து சர்ச்சையான நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்களும் தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில்  கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் நேற்று டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆளுநர் நடந்து கொண்டவிதம் குறித்து புகார் அளித்துள்ளனர்.  இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை 11.20 மணிக்கு பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.   டெல்லியில் ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் குடியரசுத் தலைவரை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் அவர் டெல்லியில் யார் யாரை சந்தித்து பேச உள்ளார் என்னும் தகவலை ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை. ஆளுநர் ரவி  இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

Tags : Governor ,Delhi , Governor's sudden trip to Delhi
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...