×

பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புணரமைப்பிற்காக தமிழக அரசு ரூ.10 கோடி மானியம் ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசுக்கு வக்பு வாரியம் நன்றி

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புணரமைப்பிற்கான வழங்கப்படும் மானியத் தொகையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 கோடியாக உயர்த்தி அறிவித்தார். இதற்கு தமிழ்நாடு வக்பு வாரியம் நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களை புணரமைப்பிற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்கி வருகிறது. இதற்காக தமிழக அரசு கடந்த ஆண்டு ரூ.6 கோடி மானியம் அளித்ததை தொடர்ந்து 77 வக்பு நிறுவனங்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளது.

தமிழகத்திலுள்ள பல்வேறு வக்பு நிறுவனங்கள் புணரமைப்பிற்காக போதிய நிதியின்றி உள்ளதை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (13.01.2023) சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புணரமைப்பிற்கான வழங்கப்படும் மானியத் தொகையினை ரூ.10 கோடியாக உயர்த்தி அறிவித்தார். இந்த மானியத் தொகையின் வாயிலாக இந்த ஆண்டு அதிக வக்பு நிறுவனங்கள் பயன் பெறும்.

பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புணரமைப்பு மானியத் தொகையினை உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும்  சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு அமைச்சருக்கும் தமிழ் நாடு வக்பு வாரியம் சார்பாக வாரியத் தலைவர் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu Govt. ,Government of Tamil Nadu , Waqf Board thanks Tamil Nadu Govt for grant allocation for renovation of mosques and dargahs
× RELATED தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி...