×

திண்டுக்கல் குடகனாறு அணையிலிருந்து வலது மற்றும் இடது பிரதான கால்வாய்களில் தண்ணீர் திறப்புக்கான அறிவிப்பு

சென்னை: திண்டுக்கல் மாவட்டம்,  வேடசந்தூர்  வட்டம்,  குடகனாறு அணையிலிருந்து வலது மற்றும் இடது பிரதான கால்வாய்களின் மூலம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்களுக்கு 18.01.2023 முதல் 03.03.2023 வரை 45 நாட்களுக்கு 264.38 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், குடகனாறு அணைக்கு கீழ் ஆற்றில் அமைந்துள்ள அணைக்கட்டின் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் மற்றும் வலது பிரதான கால்வாய் பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயர ஆறு மற்றும்  வலது பிரதான கால்வாய் மூலம் 04.03.2023 முதல் 10.03.2023 வரை 7 நாட்களுக்கு 60.77 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள 9000  ஏக்கர்  நிலங்கள்  பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Dindigul Kudakanar dam , Dindigul Kudakanar Dam, right and left main canal, water release,
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...