அமெரிக்க அதிபர் வீட்டில் ரகசிய ஆவணம் கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பிடன் வீட்டில்  கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய அமெரிக்க அதிபர்  ஜோ பிடன், கடந்த 2009 முதல் 2016ம் ஆண்டு வரை அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்தார். அந்த காலகட்டத்தில் அரசின் அதிமுக்கிய, ரகசிய ஆவணங்களை அவர் தனது வீட்டில் வைத்திருந்ததாக புகார் எழுந்தது.

அதையடுத்து அதிபர் ஜோ பிடனின் வீட்டில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்களை புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக ராபர்ட் ஹுர் தலைமையில் விசாரணை அமைத்து அமெரிக்க அடர்னி ஜெனரல் மெரிக் ஹார்லெண்ட் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: