×

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சிறை வார்டன்கள் 2 பேர் சஸ்பெண்ட்: ஆத்தூர் சிறையில் அடைப்பு

சேலம்: சேலம் அழகாபுரத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், நேற்று முன்தினம் அஸ்தம்பட்டி போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், 2 சிறை வார்டன்கள் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், அதனை வீடியோ எடுத்து வைத்து மிரட்டுகின்றனர் எனவும் தெரிவித்தார். இதுகுறித்து உதவி கமிஷனர் லட்சுமிபிரியா, இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், சேலம் மத்திய சிறையில் பணியாற்றும் வார்டன்களான அருண் (30), சிவசங்கர் (31) ஆகியோர், இளம்பெண்ணை சிறை குடியிருப்பிற்கு அழைத்துச் சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சிறை வார்டன்கள் அருண், சிவசங்கர் ஆகிய இருவர் மீதும் பாலியல் பலாத்காரம், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

தொடர்ந்து நேற்றிரவு இருவரும் ஆத்தூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல், சேலம் மத்திய சிறை எஸ்பி தமிழ்செல்வனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இதுவரையும் சஸ்பெண்ட் செய்து இன்று காலை எஸ்பி தமிழ்செல்வன் உத்தரவிட்டார்.

Tags : Rape of Juvenile, Jail Wardens, Suspended
× RELATED திருச்சி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது!!