சிதம்பரம் பதிவுத்துறை அலுவலக பணிகள் விரைவில் பணிகள் தொடங்கப்படும்: அமைச்சர் மூர்த்தி பதில்

சென்னை: சிதம்பரம் பதிவுத்துறை அலுவலக பணிகள் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர்  K.A.பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பதிலளித்தார். அப்போது; சிதம்பரம் நகரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தில் மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்) அலுவலகம், மாவட்டப்பதிவாளர் (தணிக்கை) அலுவலகம் மற்றும் 1-ஆம் எண் இணை சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இவ்வலுவலக கூட்டம் 1114 ஆண்டுகள் பழமையானது.

இது போன்ற பழமையான கட்டிடங்களில் பல பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்கிவருவதை அறிந்துதான் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 100 ஆண்டுக்கு மேலான பழைமையான கட்டடங்கள் புதுப்பிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் அடிப்படையில் தற்போது உறுப்பினர் அவர்களால் கேட்கப்படும் இந்த கட்டிடமும் தேர்ந்தெடுக்கப்பட்டு அதனை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழைய கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ. 5.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பதிவுக்கு வரும் பொது மக்களுக்காக நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டுவதற்காக திருத்திய மதிப்பீடு கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டிமுடிக்கப்படும் என்பதை உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு கூறினார்.

Related Stories: