முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 1775 மருத்துவமனைகளில் சிகிச்சை: பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 1775 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 1775 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே 970 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் 1775 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரூ.22 லட்சம் வரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 1.39 கோடி பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பிரிமியம் தொகை ரூ.849 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் பயன்பெறுவோரில் 5ல் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.

Related Stories: