பொங்கல் பண்டிகையையொட்டி போச்சம்பள்ளியில் மாடுகளுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை ஜோர்

போச்சம்பள்ளி: பொங்கல் பண்டிகையையொட்டி, போச்சம்பள்ளியில் மாடுகளுக்கான அலங்கார பொருட்கள், வண்ண கோலமாவு விற்பனை சூடுபிடித்துள்ளது. போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகே கால்நடைகளுக்கான பல வண்ண கயிறுகள், கொம்பு கயிறுகள், திருஷ்டி கயிறு, சங்கு, குஞ்சங்கள், மூக்கணாங்கயிறு, கழுத்தில் அணியும் பல வகை மணிகள், சலங்கைகள், குப்பிபட்டை, சங்கிலி, ஜங்கு பட்டை, வண்ணப்பூச்சிகள், சாட்டை போன்ற அலங்கார பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், காலநடை வளர்ப்போர் இந்த பொருட்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்கள், மாட்டு பொங்கல் தினத்தன்று மாடு, காளை மற்றும் கன்றுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து கயிறு மாற்றி, மணி, சலங்களை மாட்டி குடும்பத்துடன் வழிபடுவது வழக்கமாகும். கொரோனா இன்றியும், நல்ல மழை பெய்துள்ளதால், கடந்தாண்டை ஆண்டை காட்டிலும் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு தேவையான  வண்ண கோலமாவு, கால்நடைகளுக்கு தேவையான அலங்கார பொருட்கள், பெயிண்ட் உள்ளிட்டவை  அதிக அளவில் விற்பனையாகி வருகிறது’ என்றார்.

Related Stories: