சேந்தமங்கலம் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் கருட பஞ்சமி விழா மற்றும் 8,108 மகா சகஸ்ர தீப அலங்கார விழா

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் 8,108 மகா சகஸ்ர தீப அலங்கார விழா ஜனவரி 12ம் தேதி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில், பிரசித்திபெற்ற அருள்மிகு ஶ்ரீ லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ கருட பஞ்சமி விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஆண்டு கருட பஞ்சமியை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதியான நேற்று 8,108 மகா சகஸ்ர தீப அலங்கார பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை திருக்கடிகை பஜனை குழு வழங்கும் 4000 திவ்ய பிரபந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. 10 மணிக்கு லட்சுமி நாராயணப் பெருமாள், கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கபட்டது. வசந்த மண்டபத்தில் நம்பெருமாள் பல அவதாரங்களில் திவ்ய தம்பதிகளாக காட்சி அளித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் கருடாத்ரி பக்த குழுவின் சார்பில், 13ம் ஆண்டாக கோயில் வளாகத்தில் 8108 மகா சகஸ்ர தீப விளக்குகள் ஏற்றப்பட்டு மகா தீபாராதனை பூஜை நடந்தது.

மாலை கண்ணனின் கீதங்கள் என்ற தலைப்பில் இன்னிசை நடனம் நடைபெற்றது. திவ்ய தரிசன அலங்காரத்தில் தேவியருடன் பல்வேறு அவதாரங்களில் ஜொலிக்கும் நகைகளுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு நம்பெருமாள் திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Related Stories: