இயற்கை காட்சிகள் விருந்து படைக்கும் அப்பர் பவானி பகுதியை சுற்றிப்பார்க்க பயணிகளை அனுமதிக்க வேண்டும்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

மஞ்சூர்: அப்பர் பவானியில் அணையையும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கும் வகையில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல்  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து சுமார் 30 கிமீ தூரம் உள்ளது அப்பர் பவானி. இப்பகுதியில் இயற்கை காடுகள், பச்சை, பசேல் புல்வெளிகள், மடிப்பு மலைகள், அருவிகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. மேலும் மின்சார உற்பத்திக்கு முக்கிய நீராதாரமானதும், மாவட்டத்தில் பெரியதுமான மேல் பவானி அணையும் இப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்த தடையும் இல்லாமல் சுற்றுலா பயணிகள் அப்பர் பவானிக்கு சென்று இயற்கை காட்சிகளையும் அணைப்பகுதியையும் கண்டு ரசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா பயணிகள் அப்பர் பவானி பகுதிக்கு செல்ல வனத்துறை அதிகாரிகள் தடைவிதித்தனர். இதற்காக அப்பர் பவானி ெசல்லும் சாலையில் 10 கிமீ முன்பாக ேகாரகுந்தா பகுதியில் ெசக்ேபாஸ்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியதில் இருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அப்பர் பவானியை பார்வையிட முடியாமல் பாதியிலேயே ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதையடுத்து வனத்துறையின் தடையை நீக்கி, அப்பர் பவானியில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கும் வகையில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் எனவும், வனத்துறை சார்பில் இப்பகுதியில் சூழல் சுற்றுலாவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: