×

ஆதனக்கோட்டை ஊராட்சியில் அறுவடைக்கு தயாராகும் சம்பா நெற்கதிர்கள்

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதியில் விவசாயிகள் வடகிழக்கு பருவ மழையை பயன்படுத்தியும், ஆழ்துளை கிணற்றின் மூலமும் நிலங்களை நன்கு உழவு செய்து, சேர் அடித்து, நாற்றுப் பாவி, நடவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக தண்ணீர், களை பறித்து, உரமிட்டு, பூச்சி மருந்து ஸ்பிரே செய்து தொடர்ந்து வயல் வெளியை கண்காணித்து வந்தார்கள். தேவையான போது உரமும், மருந்தும் அடித்து வந்த நிலையில் நெல் கதிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளது.

விளைந்த நெல் கதிர்கள் புதுமணப்பெண் ஞானத்தால் தலை குனிவது போல் நெல் கதிர்கள் பூமியை பார்த்து சாய்ந்து உள்ளது. விளைந்த நிலங்களை காணும் போது விவசாயிகள் பட்ட தொடர் கஷ்டம் நீங்கி மகிழ்ச்சி அடைகிறார்கள்.



Tags : Adanakotta , Samba paddy fields ready for harvest in Adanakotta panchayat
× RELATED ஆதனக்கோட்டை பகுதிகளில் எள் அறுவடை விறுவிறுப்பு