×

பொங்கல் பண்டிகையையொட்டி திருவாரூர் பகுதியில் வாழைத்தார் விற்பனை படுஜோர்

திருவாரூர்: பொங்கல் பண்டிகையையொட்டி திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கரும்பு, வாழைத்தார் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையானது தமிழர் திருநாளாக நாடு முழுவதும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்வது, வர்ணம் தீட்டுவது போன்ற பணிகளை மேற்கொள்வர். இதுமட்டுமன்றி பொங்கலுக்கு முதல் நாளான போகிப் பண்டிகையன்று வீட்டில் இருந்து வரும் தேவையில்லாத பழைய பொருட்களை தீ வைத்து கொளுத்துவதையும் வழக்கமாக கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்காக மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மற்ற பண்டிகைகளை விட இந்த பண்டிகையானது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருவதால் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி தாய், தந்தை மற்றும் உறவினருடன் ஒன்றாக பொங்கலிட்டு வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் பொங்கல் என்றாலே பச்சரிசி வெல்லம் மற்றும் முந்திரி, திராட்சை, ஏலம், நெய் கொண்ட சர்க்கரைப்பொங்கல் மட்டுமின்றி வென் பொங்கலும் செய்யப்பட்டு வழிபடுவது வழக்கம். மேலும் இந்த பொங்கல் பண்டிகையில் செங்கரும்பு மற்றும் வாழைப்பழமும் இந்த பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்த பண்டிகையினை ஏற்ற இறக்கம் இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கலாக கொண்டாட வேண்டும் என அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் கடைபிடிக்கப்பட்டு வருவதுடன் ஆண்கள் தங்களது உடன் பிறந்த சகோதரிகளுக்கும், பெற்றோர்கள் தங்களது மகள்களுக்கும் வாழைத்தார் மற்றும் செங்கரும்புடன் வரிசை வைக்கும் முறையும் வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த பொங்கல் திருநாளானது வரும் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் பண்டிகை தினத்திற்கு 5ம் நாளான நேற்று வரிசை வைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கிய நிலையில் திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கரும்பு, வாழைத்தார் போன்றவை விற்பனை அமோகமாக நடைபெற்றது.

Tags : Pongal festival ,Tiruvarur ,Padujor , On the occasion of Pongal festival, selling bananas in Tiruvarur, Padujor
× RELATED அனைத்து தடுப்பணை கதவுகளும் திறப்பு;...