கர்நாடகாவில் நடந்த ரோட்ஷோவில் பரபரப்பு பலத்த பாதுகாப்பை மீறி பிரதமருக்கு சிறுவன் மாலை

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளி இளைஞர் தினவிழாவில் பங்கேற்க வந்த பிரதமரின் ரோட்ஷோவில் பலத்த பாதுகாப்பை மீறி அவருக்கு மாலை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஹூப்பள்ளியில் இளைஞர் தினவிழா நேற்று தொடங்கியது. இதை தொடங்கிவைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி வருகை தந்தார். இதனால் வழிநெடுக சாலையின் இருபுறமும் பாஜவினர், பொதுமக்கள் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதை ஏற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் மோடி காரின் கதவை திறந்து வைத்து நின்றவாறு ரோட்ஷோ நடத்தினார்.

அப்போது சாலையின் ஒருபுறம் நின்றிருந்த சிறுவன் பலத்த பாதுகாப்பை மீறிபிரதமர் மோடியை நோக்கி ஓடினான். அப்போது சிறுவன் கையில் வைத்திருந்த மாலையை அவரிடம் கொடுத்தான். ஆனால் காரின் மீது நின்றிருந்த மோடியால் அதை வாங்க முடியவில்லை. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மாலையை சிறுவனிடம் இருந்து வாங்கி மோடியிடம் கொடுத்தனர்.  இதையடுத்து பாதுகாவலர்கள் சிறுவனை திட்டியவாறே குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.

Related Stories: