மாலியில் தொடர் குண்டுவெடிப்பில் ராணுவ வீரர்கள் 14 பேர் பலி

பமாகோ:  மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 14 மாலி வீரர்கள் பலியாகினர். மத்திய மாலியின் கவுமாரா, மசினா  நகரங்களுக்கு இடையே உள்ள தியா, டியாபராபே என்ற கிராமங்களில் தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இதில் 14 மாலி ராணுவ வீரர்கள் உயிரிழந்து விட்டனர். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாலி ராணுவம் தெரிவித்துள்ளது.

Related Stories: