நாங்கள் எந்த நிதியும் திருப்பி அனுப்பவில்லை: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி (விசிக) பேசுகையில்,கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இத்துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.927 கோடி திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது என்றார். இதற்கு பதில் அளித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசுகையில், ”எந்த நிதியும் திருப்பி அனுப்பப்பட்டாலும், அடுத்த ஆண்டு அந்த நிதியைப் பெற்று, அதற்கான பணிகளை துறை தொடர்ந்து மேற்கொண்டுதான் வருகிறது. உறுப்பினர் கூறியது போன்று, எந்த தொகையும் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்படவில்லை. நம்முடைய ஆட்சியில் அல்ல; கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ரூ.937 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ஆர்டிஐயில் வந்த தகவலைப் பற்றி உறுப்பினர் கேட்கிறார். இருந்த போதிலும், எல்லா தொகையையும், அடுத்தடுத்த ஆண்டுகளில் செலவு செய்து கொண்டு தான் இருக்கிறோம். அதேபோன்று கோவிட் பெருந்தொற்று காலத்தில் சில பணிகள் செய்ய முடியாமல் இருந்தன. முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அனைத்து திட்டப் பணிகளையும் துறை கூடுதல் அக்கறையோடு மேற்கொண்டு தான் வருகிறோம்.

Related Stories: