17ம் தேதி எம்ஜிஆர் 106வது பிறந்த நாள் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி மரியாதை செலுத்துகிறார்

சென்னை: எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளையொட்டி 17ம் தேதி அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆரின் 106வது பிறந்த நாளான வருகிற 17ம் தேதி (செவ்வாய்) காலை 10.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதிமுக கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளார். அதை தொடர்ந்து, தலைமை கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

Related Stories: