அயலக தன்னார்வல தமிழாசிரியர்களுக்கு இணைய வழியில் ஆசிரியர் பயிற்சி

சென்னை: அயலக தன்னார்வல தமிழாசிரியர்களுக்கு இணைய வழியில் ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: அயலகத் தமிழர் தினம் 2023ஐ முன்னிட்டு, நேற்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் ஜெயசீலன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சவுந்தரராஜன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொண்டனர். நிகழ்ச்சியில் அயலகத் தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Related Stories: