பால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பொங்கலை முன்னிட்டு இலவச கிப்ட் பாக்ஸ்: பால்வளத்துறை ஆணையர் அறிவிப்பு

சென்னை: பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2022ம் ஆண்டு தொடக்க பால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இலவசமாக பால் உபபொருட்கள் வழங்கவும், இதற்கு ஏற்படும் செலவினத்தை அந்தந்த சங்கங்களே ஏற்கவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2023ம் ஆண்டிற்கு தொடக்க பால் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பால் உபபொருட்கள் ரூ.685க்கு(1/2கிலோ மைசூர்பா- ரூ.270, 1/2 லிட்டர் நெய் - ரூ.315, 200 கிராம் பாதாம் பவுடன் ரூ.100) மேற்படாத வகையில் நிபந்தனைகளுக்குட்பட்டு இலவசமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.

அதன்படி பால் உபபொருட்கள் வழங்குவதற்கான செலவினம் சங்கத்தின் நிதி நிலையினை கருத்தில் கொண்டு சங்கத்தின் நிர்வாகமே இச்சலுகையினை வழங்குவது குறித்து முடிவு செய்து பால் உபபொருட்கள் வழங்க வேண்டும். உற்பத்தி செய்யும் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் இருந்து மட்டுமே பெற்று பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். இதனை மொத்த விற்பனை விலைக்கே இப்பொருட்களை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: