×

மூத்த பத்திரிகையாளரும், இலக்கியவாதியுமான துரைபாரதி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மூத்த பத்திரிகையாளரும், இலக்கியவாதியுமான துரைபாரதி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். தமிழில் புலனாய்வு இதழியலின் முன்னோடியாக விளங்கி பல இதழியலாளர்களை உருவாக்கியவர் துரைபாரதி எனவும் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; மூத்த பத்திரிகையாளர் திரு. துரைபாரதி (வயது 67) அவர்கள் நேற்று இரவு இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். துரைபாரதி அவர்கள் நக்கீரன் இதழின் முதல் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

தமிழில் புலனாய்வு இதழியலின் முன்னோடியாக விளங்கியதோடு பல இளம் இதழியலாளர்களை உருவாக்கியவர். வித்யாஷங்கர் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதிக் கவிஞராகவும் முத்திரை பதித்தவர். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து துடிப்போடு பணியாற்றி வந்த அவரது இழப்பு தமிழ் இதழியல் துறைக்குப் பெரும் இழப்பாகும்.  அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Durai Bharati , Chief Minister M. K. Stalin condoles death of veteran journalist and writer Durai Bharati
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்