×

ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போய் மரணமடைந்த சுபஸ்ரீ குறித்து விசாரணை நடக்கிறது: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போய் மரணமடைந்த சுபஸ்ரீ குறித்து விசாரணை நடக்கிறது என்று பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுபஸ்ரீ மரணம் குறித்து சட்டமன்றப் பேரவையில் அளித்த பதிலுரையில், சுபஸ்ரீ காணாமல் போனதை அறிந்து கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதியன்று ஆலந்துரை காவல்நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் முறையாக விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள். பின்னர் துலுக்கன்காடு தோட்டம் அருகில் இருக்கக்கூடிய கிணற்றில் சுபஶ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது.

அவரது உடல் மீட்கப்பட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சுபஶ்ரீயின் உடல் கணவர் பழனிக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்த வழக்கு தொடர்பாக ஈஷா யோகா மையம் மற்றும் செம்மேடு பகுதிகளில், பதிவாகியிருக்கக்கூடிய கண்காணப்பு கேமாராக்கள் பதிவுகள்,  சுபஶ்ரீ மற்றும் அவரது கணவரின் கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும் என்று கூறினார்.

Tags : Subhasree ,Isha Yoga Center ,Chief Minister ,M.K.Stal , Isha Yoga Centre, Subhasree Death, Inquiry, Chief Minister M. K. Stalin
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்