×

தென் மாவட்டங்களில் களைகட்டும் பொங்கல் திருநாள்: பண்டிகைக்கு தேவயான பொருட்கள் விற்பனை அமோகம்..!!

கன்னியாகுமரி: பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, மஞ்சள் மற்றும் ஆடுகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பாரம்பரிய முறைப்படி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருவதால் கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள சந்தைகளுக்கு சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக லாரிகளில் கரும்புகள் வந்த வண்ணம் உள்ளன.

ஒரு கட்டுக்கு ரூ.250 முதல் ரூ.350 வரை விலை போவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் பொங்கலிடும் போது முக்கியமாக இடம் பெரும் மஞ்சள் குலைகளையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டை விட கரும்பு விலை உயர்ந்தாலும்,மஞ்சள் குலைகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். வேடசெந்தூர், அய்யலூர் ஆட்டுச்சந்தையில் பனிப்பொழிவு மற்றும் பொங்கல் என்று வியாபாரிகள் ஆடுகளை வைத்து வழிப்படுவது வழக்கம் என்பதால் ஆடுகளின் வரத்து குறைந்திருந்தது.

பொங்கலை முன்னிட்டு கிட்ட தட்ட 10,000 ஆடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இன்று 3 கோடி வரை ஆடுகள் விற்பனையாகும் என கணிக்கப்பட்ட நிலையில் 2000 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. 1 கோடி ரூபாய் மதிப்பில் தான் ஆடுகள் வியாபாரம் நடைபெற்றதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கரூரில் உள்ள மணல்மேடு ஆட்டுச்சந்தையில் பொங்கல் திருநாளையொட்டி ஆடுகள் விற்பனை களைகட்டி இருந்தது.

 வாரம் தோறும் நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் கொண்டுவந்த ஆடுகளை வாங்கி செல்ல வியாபாரிகளும், மக்களும் ஆர்வம் காட்டினர். இதனால் ஒரே நாளில் 1 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.   


Tags : Weeding Pongal , Kanyakumari, Pongal Tirunal, Goods Sale, Amogam
× RELATED களைகட்டும் பொங்கல் பண்டிகை!:...