×

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு 13, 14ம் தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக போக்குவரத்துத்துறை சார்பில் அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருந்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல பண்டிகை முடிந்து ஊர் திரும்ப ஜன.16ம் தேதிமுதல் 18ம் தேதி வரை போக்குவரத்துத்துறை சார்பில் 15,619 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மட்டும் நெரிசல் மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து முனையங்களிலிருந்தும் செல்லும் கடைசி மெட்ரோ இரயில் சேவை இரவு 11 மணிக்கு பதிலாக 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 18-ஆம் தேதி மட்டும் அனைத்து முனையங்களிலிருந்தும் புறப்படும் முதல் மெட்ரோ இரயில் சேவை காலை 5 மணிக்கு பதிலாக காலை 4 மணி முதல் இயக்கப்படும். எனவே, 2023 ஜனவரி 13,14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் 13.01.2023 (வெள்ளிக்கிழமை), 14.01.2023 (சனிக்கிழமை) மற்றும் 18.01.2023 (புதன்கிழமை) ஆகிய தேதிகளுக்கு மட்டுமே என மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Metro train service timings extended on 13th and 14th due to Pongal holiday: Metro administration notice
× RELATED மீண்டும் வாக்குச் சீட்டு முறை...