×

தோகைமலை அருகே ஆர்டி மலை ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேளாண் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி

தோகைமலை : தோகைமலை அருகே ஆர்டிமலை ஊராட்சி ஆர;டிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி வளாகத்தில் தொடங்கிய வேளாண்மையின் விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஆர்;டிமலை ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் பாலமூர்த்தி, பள்ளி வேளாண் ஆசிரியர் கனகராஜ் மற்றும் முசிறி எம்ஐடி வேளாண் தொழில் நுட்ப கல்லூரியின் மாணவிகள் முன்னிலை வகித்தனர்.

விழிப்புணர்வு பேரணியானது பள்ளியில் தொடங்கி திருச்சி மெயின் ரோடு, ஆர்டிமலை நான்கு மாட வீதிகள், முக்கிய தெருக்கள் வழியாக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக முடிவுற்றது. பேரணியில் வந்த மாணவ மாணவிகள் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும், வீடுகள் தோறும் மரகன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும், சுற்றுப்புற சூழல்களை பேணிகாக்க வேண்டும் என்று கையில் பதாதைகளை ஏந்தியவாறு பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர்.

பின்னர் வேளாண் தொழில் நுட்ப கல்லூரியின் மாணவிகள் சார்பாக ஆர்டிமலை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அனைவருக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கினர். தொடர்ந்து வேளாண்மையின் முக்கியத்துவம், வேளாண் பணிகளின் அனுபவங்கள், கொரோனா விழிப்புணர்வு, வேளாண் கல்வியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் மாசுபாடுகள், தற்போது உள்ள சூழ்நிலையில் வேளாண்மைகளின் முக்கிய பங்குகள் குறித்து பள்ளியின் வேளாண்மை துறை மாணவ மாணவிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளியின் வேளாண் பயிற்றுனர் திவ்யபாரதி, வேளாண் தொழில் நுட்ப கல்லூரியின் மாணவிகள் மனோஸ்ரீ, மீரா, மெர்லின், நேகா, நிருபா, நிஷாந்த் பர்ஹீன், ஓவியா ஆகியோர் கலந்து கொண்டு தொழில் நுட்பங்களை எடுத்துரைத்து மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.இதில் ஆசிரியர்கள் உள்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : RT ,Mountain Padrakshi Government Higher School ,Thogimalai , Thokaimalai : About the importance of agriculture in Ardimalai Panchayat near Thokaimalai; Timalai Government Higher Secondary School.
× RELATED கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளதால் RT -PCR...